News April 3, 2025
சிவகங்கை மக்களே தயாராக இருங்க சென்னைக்கு புதிய ரயில்

சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு இரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-இராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.இந்த ரயில் சிவகங்கை வழி செல்லும். மக்களே உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.
Similar News
News April 10, 2025
காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.
News April 10, 2025
சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளர் (GENERAL HELPER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்குள் படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
News April 10, 2025
சிவகங்கையில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <