News April 3, 2025
சேலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
கோட்டை மாரியம்மனுக்கு மஹா நெய்வேர்த்தியம்

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.13) மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கும்பப் படையலிட்டு மஹா நெய்வேர்த்தியம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
News August 13, 2025
சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் முகாம்!

சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில்.
மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
News August 13, 2025
காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை!

நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆக.15- ஆம் தேதி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சேலம் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.