News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
Similar News
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- செம்மலை முருகன் கோயில் போங்க

செங்கல்பட்டு மாவட்டம் செம்மலையில் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க.
News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் எழுத உத்தரவு

செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில், சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என எல்லாவற்றிக்கும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் எனவும் தமிழில் பெயர் பலகைகள் மே மாதம் 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.