News April 3, 2025
வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 குறைந்தது

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.3) கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு விலை உயர்வைக் கண்டு வந்த வெள்ளி, இன்று <<15975872>>தங்கம்<<>> விலை உயர்ந்தபோதும் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 7, 2025
டாஸ்மாக் முறைகேடு நிரூபணமாகி விட்டது: இபிஎஸ்

சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்த இபிஎஸ், டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என டாஸ்மாக் கோரிக்கை வைத்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு தவறு செய்தது நிரூபணம் ஆகிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இபிஎஸ் கூறினார்.
News April 7, 2025
பரஸ்பர வரி விதிக்குமா? இந்தியாவின் முடிவு என்ன?

அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் சீனா பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை உயர்த்த தயாராகி வருகின்றன. ஆனால், இந்தியா இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்புகிறது. முதல் நாடாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து ஆசிய நாடுகளை ஓரங்கட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
News April 7, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டு… அமைச்சர் ரகுபதி மறுப்பு!

டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.