News April 2, 2024
70 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்

Mother of Dragons ( டிராகன்களின் தாய்) என்று செல்லமாக அழைக்கப்படும் Pons – Brooks வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியை நெருங்கி வந்திருக்கிறது. மேற்கு வானில் மிக பிரகாசமாக காணப்படும் இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 1954ஆம் ஆண்டு தென்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு வானில் தெரியும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 2095ஆம் ஆண்டு தென்பட வாய்ப்புள்ளது.
Similar News
News January 19, 2026
₹200 கட்டினால் போதும் ₹75,000 கிடைக்கும்

மத்திய அரசின் ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வெறும் ₹200 பிரீமியமாக கட்டினால், ₹75,000 வரை காப்பீடு கிடைக்கும். காப்பீடுதாரர் இயற்கை மரணமடைந்தால் ₹30,000, விபத்து காரணமாக உயிரிழந்தால் ₹75,000, Partial disability என்றால் ₹37,500, Fully disabled என்றால் ₹75,000 கிடைக்கும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. முழு விவரங்களை அறிய LIC-ஐ அனுகவும். SHARE.
News January 19, 2026
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை ஸ்டிரைக் அறிவிப்பு

சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
News January 19, 2026
‘கம்பவுண்டர்’ ஏன் அந்த பெயர் தெரியுமா?

‘டாக்டர் ஆகலன்னா என்ன, கம்பவுண்டர் ஆகலாம்’, 90s கிட்ஸ் அதிகம் கேட்ட டயலாக். ஆனால், கம்பவுண்டர் என்பது வெறும் உதவியாளர் பணி அல்ல. அன்று மருந்துகளில் பிணைப்பு ரசாயனங்கள் இல்லாததால், பல்வேறு மூலக்கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து (Compounding) மருந்துகளை உருவாக்கினர். இதனாலேயே ‘கம்பவுண்டர்’ என்று பெயர். இதற்கான டிப்ளமோ படிப்புகளும் இருந்தன. நவீன மருந்துகளின் வருகையால் இன்று அந்த பணி மறைந்துவிட்டது.


