News April 3, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,560க்கும், சவரன் ₹68,480க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News October 29, 2025
இந்திரனின் புகழை திருட பாஜக முயற்சிக்கிறது: ஆம் ஆத்மி

தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்று மாசு அதிகமானது. இதனால் 53 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை மழை பெய்ய வைப்பதற்காக, மேக விதைப்பு நடைபெற்றது. இதனை ‘மிகப்பெரிய மோசடி’ என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. உண்மையாகவே மழை பெய்தால், அவர்கள் (பாஜக) மழைக் கடவுளான இந்திரனின் புகழை திருடக்கூடும் என்றும் அக்கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. ஏற்கெனவே சில சமயங்களில் டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது.
News October 29, 2025
அது அபத்தமானது: சமந்தா

மற்ற நடிகைகளை போலவே நடிக்கவும், தோற்றமளிக்கவும், நடனமாடவும் கடினமாக முயற்சித்ததாக சமந்தா கூறியுள்ளார். ஆனால், அந்த நடிப்பை தற்போது திரும்பி பார்க்கையில் மிகவும் அபத்தமானதாக இருப்பதாக நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டதும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவிலிருந்து வெளியே வந்ததும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் என சமந்தா கூறியிருந்தார்.
News October 29, 2025
‘பாபர் மசூதி கட்டப்படும்’: FB-ல் பதிவிட்ட வழக்கில் திருப்பம்

‘மீண்டும் பாபர் மசூதி கட்டப்படும்’ என்று சட்டக்கல்லூரி மாணவர், 2020-ல் FB-ல் பதிவிட்டிருந்தார். இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவர் தரப்பில், SC-ல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த கோர்ட், வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி கோர்ட், இந்த வழக்கை தனது சொந்த விருப்பத்தின் பேரில் பரிசீலிக்கலாம் என்றும் SC அறிவுறுத்தியுள்ளது.


