News April 3, 2025

தேனி மக்களுக்கு ஏப்ரல் 5 முக்கியமான நாள் 

image

தேனி, பெரியகுளம், சின்னமனுார் செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் ஏப்.5ல் காலை 11:00 முதல் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின் கட்டண பிரச்னைகள், குறைந்த மின்னழுத்த புகார்கள் தீர்வு காணலாம். இதில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

தேனி: துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் பகுதிகளில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் துப்பாக்கியை உடனடியாக ஒப்படைக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.

News March 13, 2026

தேனி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 13, 2026

தேனி: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!