News April 3, 2025
குழந்தையின் ஆணுறுப்பை கடித்து துப்பிய கொடூரம்!

உ.பி.யில் 12 வயது சிறுவன் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றபோது, மற்ற குழந்தைகள் அவனை விரட்டி அடித்துள்ளனர். இதனால், கோபமடைந்த சிறுவன், அவ்வீட்டில் தனியாக இருந்த 6 வயது குழந்தையின் ஆணுறுப்பை கண்மூடித்தனமாக கடித்துள்ளான். ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி, குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளிடமும் கோபம் எல்லை மீறுகிறதே?
Similar News
News April 4, 2025
ரேப் புகார்… 25 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய நடிகர்!

இங்கிலாந்து பாப் பாடகி கேட்டி பெர்ரியின் முன்னாள் கணவரும், நகைச்சுவை நடிகருமான ரஸ்ஸல் பிராண்ட் மீது ரேப் புகார்கள் பதிவாகி இருப்பதாக லண்டன் போலீஸ் தெரிவித்துள்ளது. 1999-ல் ஒரு பெண்ணை ரேப் செய்ததாகவும், 2004-ல் ஒரு பெண்ணை வாய்வழி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மே 2-ல் கோர்ட்டில் ஆஜராகி அவர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 4, 2025
Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

தவெக தலைவர் <<15990697>>விஜய்க்கு Y பிரிவு<<>> பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Y பிரிவு பாதுகாப்பு என்பது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பிரபலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. கமாண்டோக்கள், போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு, ஷிஃப்ட் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கும். அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த மாநிலத்தில் மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். SHARE IT
News April 4, 2025
அதிரடியாக குறையும் தங்கம், வெள்ளி விலை

மற்ற நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரியால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 68 டாலர்கள் (1.8%) குறைந்து 3,046 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. வெள்ளியின் விலை 1.68 டாலர்கள் (5.3%) குறைந்து 3.22 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. இதனால், இந்திய சந்தையில் நாளை தங்கம் விலை சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.