News April 3, 2025

வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர், மதுரை, அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம். SHARE செய்து உதவவும்

Similar News

News April 10, 2025

மதுரை புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

வண்டியூர் மாரியம்மன் கோயிலின் ஐதீகம்

image

மதுரையின் காவல் தெய்வமாக வண்டியூர் மாரியம்மன் விளங்குகிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விஷேஷ நிகழ்ச்சி நடத்தினாலும், மாரியம்மனிடம் உத்தரவு கேட்ட பிறகே நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரியது எனும் பெயரை பெற்றுள்ளது. தீராத வியாதி, குடும்ப பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை நீங்க இங்கு வழிபட்டால் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். Share.

News April 10, 2025

மதுரையில் இன்றைய காய்கறி விலை

image

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்றைய (ஏப்.10) விலைநிலவரம்: தக்காளி ரூ.10 முதல் ரூ.20, பீட்ரூட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.60, கேரட் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, கத்திரிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, சீனி அவரைக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ. 15 முதல் ரூ.30 க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!