News April 3, 2025
மர்ம காய்ச்சலால் தொழிலாளி உயிரிழப்பு

ஏடூர் கிராமத்தில் மூன்று நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி, 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலித்தொழிலாளி சுரேஷ் (46) உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யாததால், கிராமவாசிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் பரவி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News March 18, 2026
திருவள்ளூர் வட்டாட்சியர் எண்கள்

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 18, 2026
திருத்தணி: வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்!

திருத்தணி: கூளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (30), வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது குடும்பம் தனியாக வசித்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு தூங்க சென்ற ராஜசேகர், நேற்று காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 18, 2026
அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.


