News April 3, 2025
RBI துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நியமனக்குழு அங்கீகரித்துள்ளது. இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். தற்போது, தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாக உள்ள இவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்து வருகிறார்.
Similar News
News November 8, 2025
கிளாஸி துல்கர் சல்மான்

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் துல்கர் சல்மானுக்கு, 3 மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது குரல் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கதை தேர்வில் அதீத கவனம் செலுத்தும் துல்கர், நடிப்பிலும் மிரட்டி வருகிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிளாஸி துல்கர் சல்மானை பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 8, 2025
பிஹாரில் 160 இடங்களில் வெற்றி உறுதி: அமித்ஷா

பிஹார் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு SIR பணிகளே காரணம் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் NDA கூட்டணிக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், குறைந்தபட்சம் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News November 8, 2025
போருக்கு ரெடி: பாகிஸ்தானுக்கு ஆப்கன் பதிலடி

இஸ்தான்புல்லில் நடத்த PAK-AFG இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இனி பேச்சுவார்தை நடத்த வாய்ப்பில்லை என பாகிஸ்தான் <<18234772>>அமைச்சர் ஆசிப் <<>> கூறியிருந்தார். இதனால் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் ஆப்கான், போருக்கு தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக PAK-AFG எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


