News April 3, 2025
காதலியை கல்லால் அடித்து கொன்ற காதலன்

அனகாபுத்தூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (33) கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே வசிக்கும் ஞானசித்தன் உடன் பாக்யலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்து ஞானசித்தன் கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News April 4, 2025
சென்னை கலெக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி; 3 பேர் கைது

சென்னை கலெக்டர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டரின் கையொப்பத்தை போலியாகப் போட்டு பணம் பறிக்கப்பட்டது. விசாரணையில் வருவாய் ஆய்வாளர்கள் பிரமோத், சுப்பிரமணி மற்றும் டிரைவர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 4, 2025
ஷவர்மா சாப்பிட்டு 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்ட ரோஹித் (17) என்பவருக்கு உடல்நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் சாப்பிட்ட 20 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <