News April 3, 2025
வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 13, 2026
தேனி: தமிழக அரசை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் பரவலை தடுக்க தவறியதாக தமிழ்நாடு அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் பாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
News March 13, 2026
தேனி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் தேவிபாலா (22). இவரது கணவர் ரத்தினபாண்டி அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்து வந்த நிலையில் தேவிபாலா கடந்த ஒரு வருடமாக அவரது தாயார் வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அங்கு வந்த ரத்தினபாண்டி மனைவியுடன் தகராறு செய்து அவரை அரிவாள் கொண்டு வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் ரத்தினபாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
News March 13, 2026
தேனி: பைக் மீது கிரேன் மோதி இருவர் பலி

கம்பம் பகுதியை சேர்ந்தவர் லெனின் குமார். இவருக்கு நேற்று முன் தினம் உடல்நிலை சரியில்லாததால் அவரது உறவினர் முருகன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். உத்தமபாளையம் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த பொழுது செல்வம் என்பவர் ஓட்டி வந்த கிரேன் இவர்களது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.


