News April 3, 2025

IPLன் மிக மோசமான ரெக்கார்ட்டை படைத்த RCB!

image

நேற்று, GTயிடம் RCB தோல்வியடைந்து, மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஒரே கிரவுண்டில் அதிக போட்டிகளை இழந்த டெல்லி அணியின் சாதனையை RCB சமன் செய்துள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை RCB விளையாடிய 92 போட்டிகளில் 44ல் தோற்றுள்ளது. டெல்லி அணி, டெல்லியில் விளையாடிய 82 போட்டிகளில் 44ல் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 10, 2026

கேஸ் புக்கிங் செய்ய இனி 25 நாள்கள் காத்திருக்கணும்

image

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கல் & கள்ளச்சந்தையை தடுக்க, 2 சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாள்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு Commercial கேஸ் சப்ளையில் முன்னுரிமை அளிக்கவும், ஹோட்டல்கள், பிற தொழிற்சாலைகளுக்கான சப்ளையை மதிப்பாய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News March 10, 2026

BREAKING: செந்தில் பாலாஜி பரபரப்பு அறிவிப்பு

image

கரூர் வழக்கு தொடர்பாக வரும் 17-ம் தேதி CBI அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது, CBI எழுப்பும் கேள்விகளுக்கு தான் உரிய விளக்கத்தை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று, CBI அனுப்பிய சம்மனை அவர் ஏற்க மறுத்ததால், E-மெயில் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனது X பக்கத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

News March 10, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

image

தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹15,050-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹1,20,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இன்று காலை சரிந்த தங்கம், தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

error: Content is protected !!