News April 3, 2025
வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 7, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 07) நீர்மட்டம்: வைகை அணை: 56.69 (71) அடி, வரத்து: 504 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33 (57) அடி, வரத்து: 115 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 89.21 (126.28) அடி, வரத்து: 32.74 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.30 (52.55) அடி, வரத்து: 14 க.அடி, திறப்பு: இல்லை.
News April 7, 2025
தேனி இளைஞர்களுக்கு வேலை ரேடி

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
News April 7, 2025
தேனியில் 80 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்தி காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி 80.இவர் குடும்பத்தை பிரிந்து பராரியாக சுற்றியுள்ளார்.கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் பெரியகுளம் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-