News April 3, 2025
பெரியகுளத்தில் பயங்கரம் – சிறுவன் கொலை

பெரியகுளத்தை சேர்ந்த ஆனந்தி(43) தனது தம்பி பாண்டீஸ்வரன்(33), மகன் நிஷாந்த்(14) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்யும் பாண்டீஸ்வரன் ஏப்ரல்.1 அன்று மது அருந்த பணம் கேட்டு ஆனந்தியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்த ஆனந்தியையும் சிறுவன் நிஷாந்தையும் இரும்பு கம்பியால் பாண்டீஸ்வரன் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். போலீசாருக்கு பயந்து பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News April 4, 2025
தேனியில் அலைபேசி பழுது நீக்குதல் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச அலைபேசி பழுது நீக்குதல் பயிற்சி ஏப்.28 முதல் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
கம்பம் : பாம்பு தீண்டியதில் இளைஞர் உயிரிழப்பு

கம்பம் அருகே சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (21). இவர் நேற்று முன் தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பைக்கில் மறைந்திருந்த பாம்பு இவரை தீண்டி உள்ளது. கம்பம் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு (ஏப்.3) பதிவு.
News April 4, 2025
தேனி: கடைகளில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே.15.க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.