News April 3, 2025
இன்று SRH vs KKR: வெற்றி யாருக்கு?

ஐபிஎல்லின் 15ஆவது லீக் போட்டியில் இன்று SRH vs KKR மோதுகின்றன. கொல்கத்தாவில் மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ள ஹைதராபாத் ஆரஞ்சு படை, இன்றைய போட்டியில் வெல்ல போராடும். அதேபோல் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ள கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வென்று, தன் மீதான களங்கத்தைத் துடைக்க முற்படும் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
Similar News
News March 14, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTOS

நடிகை த்ரிஷா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அவர் உற்சாகமூட்டுவார். அந்த வகையில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வாடாமல்லி வண்ண புடவையில் இருக்கும் புதிய போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். த்ரிஷாவின் பதிவுக்கு ரசிகர்கள் ❤️ விட்டு வருகின்றனர்.
News March 14, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

Toyoto நிறுவனம், சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு விலைக் குறைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் வரை இந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும். கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு என்ன விலை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க.
News March 14, 2026
மக்கள் நலனை காக்குமா மத்திய அரசு? CM ஸ்டாலின்

சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள TN அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 3,228 கி.லி. மண்ணெண்ணெய், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


