News April 3, 2025
மகளுடன் ரெடின் கிங்ஸ்லி

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கிங்ஸ்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 2023 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்றது.
Similar News
News March 24, 2026
தூத்துக்குடி GH-ல் திருட்டு: நோயாளிகள் அச்சம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள், நோயாளிகள், உறவினர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஒரே நாளில் பலர் புகார் அளித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வருவோர் மத்தியில் பெரும் அச்சம்.
News March 24, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

EPFO-வில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ₹5,200 கோடி நிதியை சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் தானாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 55 வயதை கடந்த ஓய்வு பெற்றவர்களின் EPFO கணக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தால் அவை செயலற்ற கணக்குகளாக கருதப்படும்.
News March 24, 2026
அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி இல்லை: EPS

தமாகா, IJK, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு நாளை இறுதிசெய்யப்படும் என EPS கூறியுள்ளார். கூட்டணிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வருவாரா என்ற கேள்விக்கு, பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், அதனால் அவர் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை எனவும் EPS திட்டவட்டமாக தெரிவித்தார். இன்னும், சில நாள்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.


