News April 3, 2025
கோவா அணிக்கு மாறியது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக் கொண்டதாக, ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ்நாள் முழுவதும் அந்த அணிக்கு கடைமைபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், தற்போது கோவா அணிக்கு மாறியுள்ளார்.
Similar News
News March 19, 2026
ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் திமுக கூட்டணி பஞ்சாயத்து

புதுச்சேரியில் திமுக-காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில் நேற்று புதுச்சேரியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்.,- திமுகவினர் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை முடிந்துவிடும் எனவும் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
News March 19, 2026
விடுமுறை .. சற்றுமுன் புதிய அறிவிப்பு வெளியானது

தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அரசு & தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறையை ECI வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.
News March 19, 2026
சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.


