News April 3, 2025
ஆல்டைம் ரெக்கார்டை சமன் செய்த Bhuvi

RCB பவுலர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல்லின் ஆல்டைம் ரெக்கார்டை சமன் செய்துள்ளார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 183 விக்கெட்களை வீழ்த்தி, பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அதேபோல், பவர்பிளேயில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். பவர்பிளேயில் மட்டும் அவர் 73 விக்கெட்களை எடுத்துள்ளார்.
Similar News
News March 25, 2026
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை இலவசம்: EPS

அதிமுக ஆட்சி அமைத்தால் TN-ல் நவீன கருத்தரிப்பு சிகிச்சை திட்டம் விரிவுபடுத்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். குழந்தை இல்லாத தம்பதிகளின் நலனுக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா IVF சிகிச்சை ஹாஸ்பிடல்களில் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசு ஹாஸ்பிடல்களில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் நர்ஸ்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அவர் கூறியுள்ளார்.
News March 25, 2026
BREAKING: அடுத்தடுத்து விலகினர்.. அரசியல் பரபரப்பு

தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத வகையில் 5 முனை போட்டி என்பதாக மாறியுள்ளது. எதிர்பாராத விலகல்கள், கட்சி மாற்றம், புதிய கூட்டணிகள், புதிய கட்சிகள் என்றும் பரபரக்கிறது. இந்நிலையில், சரத்குமார், வைகோ, TTV தினகரன், வேல்முருகன் ஆகியோர் தாங்கள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. அதிலும், கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்பது புதிய ஹைலைட்டாகவும் அமைந்துவிட்டது.
News March 25, 2026
கமல்ஹாசன் செய்தது தியாகம்: ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல், <<19467680>>நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு<<>> ஸ்டாலின் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், TN முழுவதும் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது தனது அன்பான வேண்டுகோள் எனவும் குறிப்பிட்டுள்ளார். கமல் செய்திருப்பது தியாகம் என்று சுட்டிக்காட்டிய அவர், தன்னலத்தை பின் தள்ளி, TN நலனை முன்னிறுத்தியுள்ள அவரது முடிவை வரலாறு பாராட்டும் என்றும் கூறியுள்ளார்.


