News April 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

Similar News

News March 14, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 – ஐ முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தில், ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோ்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News March 14, 2026

திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை முடித்துவைப்பு

image

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முடிவடையவுள்ளது. இப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஜன.20 முதல் 4 நாள்கள் நடைபெற்றது. பின்னர் பிப்.17-ல் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாதம் 20-ம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில், 2021 முதல் பொறுப்பு வகிக்கும் திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இது முறைப்படி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

News March 14, 2026

சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

image

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!