News April 3, 2025

வக்ஃபு விவகாரம்.. காங். MLA மரண எச்சரிக்கை

image

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறினால் உயிரை மாய்த்து கொள்வேன் என பீகார் காங். MLA இஷார்குல் ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்னை மட்டும் அல்ல, அடுத்ததாக குருத்வாரா, தேவாலயங்கள், கோயில்களின் நிலங்களை கைப்பற்ற அரசு இதுபோன்றதொரு மசோதாவை கொண்டுவரும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News March 21, 2026

விஜய் பற்றிய கேள்வி.. கடுப்பான கமல்

image

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவலை எப்படி பார்க்கிறீர்கள் என கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் ஏன் அதை பார்க்க வேண்டும், எனக்கு வேலை உள்ளது; அதை பார்க்கிறேன் என அவர் பதிலளித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியது முதல் விஜய்யை தம்பி என அழைத்துவந்த கமல், தற்போது தவெக பற்றிய கேள்வியை தனது பாணியிலேயே தவிர்த்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

News March 21, 2026

CINEMA 360: KH×RK பட அப்டேட் கொடுத்த கமல்!

image

KH×RK படத்தின் ஷூட்டிங் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் *‘அசத்தீட்டீங்க தம்பி’ என ‘யூத்’ படத்திற்காக கென் கருணாஸை சிம்பு பாராட்டியுள்ளார் *பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது *சாமானிய மக்களின் வாழ்க்கை & போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாக யோகிபாபு தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

வேட்பாளர்களின் சமூக வலைதள விவரங்களை கேட்கும் ECI

image

வேட்புமனுவில் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள (SM) கணக்கு விவரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. மேலும், டிவி, ரேடியோ, SMS, SM-களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு ஊடகச் சான்றிதழ் & தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன், தேர்தல் முடிவடைந்த 75 நாள்களுக்குள் SM உள்பட டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசார செலவினங்களை ஒப்படைக்க வேண்டும்.

error: Content is protected !!