News April 3, 2025

கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

image

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

Similar News

News August 14, 2025

கழிப்பறையிலும் திமுக ஊழல்: இபிஎஸ்

image

ஒரு நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ₹800 என ₹1,000 கோடிக்கு சென்னையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கழிப்பறையிலும் திமுக ஊழல் செய்திருப்பதாகவும் விமர்சித்தார். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு சென்று, அவர்களுடன் தேநீர் சாப்பிட்டு ஆதரவாக பேசினார். ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் கூறினார்.

News August 14, 2025

ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

image

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.

News August 14, 2025

அமைச்சரா? உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா? இபிஎஸ்

image

தமிழகத்தில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவது திமுகவினரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள், தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்கான நடவடிக்கை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இப்பள்ளிகளை மூடுவதன் மூலம் அது இயங்கிய இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.

error: Content is protected !!