News April 3, 2025
திருவாரூரில் தேர் பணி தீவிரம்

திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுவதால் தேரை அலங்கரிக்கும் பணி மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் திருவாரூர் ஆழி தேரை காண்பதற்கு மிக ஆவலுடன் உள்ளனர். தேரை சுற்றி வருவதற்கு நான்கு வீதிகளும் இடையூறு இல்லாமல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது.
Similar News
News March 15, 2026
திருவாரூர்: பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டை பகுதி உட்பட்ட திருமேனி ஏரி நரிக்குறவர் காலனி மக்களுக்கு, 54 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இப்பொழுது பாமணி நரிக்குறவர் காலனி மக்களுக்கு, 39 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தொழில்துறை டி ஆர்.பி ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News March 15, 2026
திருவாரூர்: போலீசார் சோதனையில் 150 மது பாட்டில்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (180 லிட்டர்) கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்