News April 3, 2025
வக்ஃப் சொத்து என்பது என்ன?

வக்ஃப் சட்டம் 1995-ன் படி, எந்தவொரு முஸ்லிமும் தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளை கடவுளின் (அல்லாஹ்) பெயரில் பக்தி, தர்மம் அல்லது மத நோக்கத்திற்காக நிரந்தரமாக அர்ப்பணித்தால், அத்தகைய அர்ப்பணிப்பு வக்ஃப் என்றும், அத்தகைய சொத்து வக்ஃப் சொத்தும் எனவும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் வழங்கும் இந்த சொத்துகளை அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இதற்காக மத்திய, மாநில வக்ஃப் வாரியங்கள் உள்ளன.
Similar News
News March 22, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 22, 2026
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இழுபறி ஏன்?

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி முடிந்தபாடில்லை. ஆளுக்கு 15 சீட் பிரிச்சுக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறதாம். ஆனால், ஆளுக்கு 14 சீட் பிரித்துக்கொண்டு, மீதியை விசிக & CPI-க்கு கொடுக்கலாம் என திமுக சொல்கிறதாம். இதை ஏற்க மறுக்கும் காங்., இங்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எங்களுக்கு உங்களைவிட ஒரு சீட்டாவது அதிகமாக வேண்டாமா என மல்லுக்கட்டுவது தான் இழுபறிக்கு காரணமாம்.
News March 22, 2026
தோனியின் கடைசி IPL இதுதான்: ராபின் உத்தப்பா

இந்தாண்டு IPL தொடரில் தோனி ஆலோசகராகவும் வீரராகவும் அணியில் செயல்படுவார் என CSK Ex வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடர்தான் CSK அணிக்காக மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடும் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது; வெளியேறப்போகிறோம் என்பதை உணர்ந்து, அணியிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக்கொள்ள அவர் விரும்புவார் எனவும் கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?


