News April 3, 2025

விடிய விடிய மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Similar News

News December 29, 2025

₹1,100 கோடி.. வசூலில் சுழன்று அடிக்கும் ‘துரந்தர்’!

image

ரன்வீர் சிங் நடித்துள்ள ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘துரந்தர்’, உலகம் முழுவதும் ₹1,100.23 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஷாருக்கானின் ‘பதான்’, பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படங்களின் வாழ்நாள் வசூலை முந்தியுள்ளது. அதேபோல், இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூலை ஈட்டிய 7-வது படமாகவும் உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ₹862.23 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2025

முகத்தில் உள்ள தேமல் மறைய சூப்பர் TIPS!

image

முகத்தில் ஆங்காங்கே தேமல் இருப்பதால் வெளியில் முகத்தை காட்டவே தயங்குறீங்களா? இதற்கு டாக்டரை அணுகுவது முக்கியம் என்றாலும், வீட்டு வைத்தியமும் செய்து பார்க்கலாம். ➤துளசி இலையுடன் சுக்கை வைத்து நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் ➤இரவில் படுக்கும் முன் தேமல் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤1 மணி நேரம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் தேமல் விரைவில் மறையும். SHARE IT.

News December 29, 2025

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. அரசு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

பள்ளிகள் தொடர் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளையும்(டிச.30), நாளை மறுநாளும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதலாக சுமார் 1,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!