News April 2, 2025

குமரியில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்

image

குமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்,மீன் இனப்பெருக்க காலத்தை ஒட்டி வரும் 15ஆம் தேதி முதல் ஜூன்.15ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை.

Similar News

News April 12, 2025

திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் 5 நாட்கள் ஆய்வு – ஆட்சியர்

image

அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை M/S ரைட்ஸ் நிறுவனம் (மத்திய பொதுத்துறை நிறுவனம்) அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்கள் 15.04.2025 முதல் 19.04.2025 வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News April 12, 2025

தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி நாகர்கோவில் வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்து கொண்டிருக்கிறது. இன்று தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி இன்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அவை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கிக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டது.

News April 12, 2025

அதிமுக, பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி – விஜயதரணி

image

அதிமுக மற்றும் பா.ஜ. கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. பொதுமக்களிடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக மகத்தான வெற்றியைப் பெறும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி கூட்டணி அமைத்துள்ளார். தமிழகத்திற்கு அவரது வருகை வெற்றிக்கு அடையாளமாக உள்ளது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!