News April 2, 2025

BREAKING: குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ஆர்சிபி நிர்ணயித்துள்ளது. பெங்களூரில் நடக்கும் இப்போட்டியில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரர் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மற்ற வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லிவிங் ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.

Similar News

News March 24, 2026

காங்கிரஸில் ப.சிதம்பரத்திற்கு கூடுதல் மவுசு!

image

திமுக – காங்., கூட்டணி உறுதியானதில் ப.சிதம்பரத்தின் பங்கு மிக முக்கியமானது. தேசிய அளவில் மிக முக்கியமான தலைவராக இருந்தாலும், மாநில அரசியலில் தலையிடாமல் இருந்தார். ஆனால், தற்போது தேர்தலில் சீட்டு கேட்டு காங்., தலைவர்கள் பலர் அவரது வீட்டுக் கதவை தட்டுவதால் தமிழக காங்கிரஸில் அவரது மவுசு கூடியுள்ளது. 28 தொகுதிகளில் குறைந்தது 10 சீட்டுகள் அவரது ஆதரவாளர்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் கதர் வேட்டிகள்.

News March 24, 2026

தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா

image

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேமலதா போட்டியிடுவாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்தில் நேற்று தேமுதிக மா.செ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலத்தில் பிரேமலதாவும், சாத்தூர் அல்லது விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டும் என மா.செ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு இருவரும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 24, 2026

வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

image

சம்மர் சீசனில், வியர்க்குரு வாட்டி வதைத்து விடும். இந்த வியர்க்குருவை சமாளிக்க, பிரத்யேக பவுடர்களை பலர் பயன்படுத்துவார்கள். அந்த பவுடர்களில் Arrow root starch, Corn starch, Menthol, Zinc oxide போன்றவை இருக்க வேண்டும். அப்போது தான், அவை பயன்படுத்தும் போது, இதமாக உணர முடியும். இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக யூஸ் செய்தால், அது சருமத்தில் பிரச்னைகளை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர். SHARE.

error: Content is protected !!