News April 2, 2024
நடிகர் மரணம்.. காரணம் இதுதான்!

நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2022 முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடல் சென்னை சிறுசேரியில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

தலைசுற்றும் அளவிற்கு தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், வேகமாக அதிகரிக்கும் தங்கம் விலை, சட்டென சரியும் என பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹12,000-ஆக வாய்ப்பிருப்பதாகவும், அப்போது முதலீடு செய்வதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 1 கிராம் ₹16,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News January 29, 2026
Best Actors Awards: விஜய் சேதுபதி முதல் விக்ரம் பிரபு வரை..

2016 முதல் 2022ம் ஆண்டு வரைக்குமான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புரியாத புதிர் (2016) – விஜய் சேதுபதி, தீரம் அதிகாரம் ஒன்று (2017) – கார்த்தி, வட சென்னை (2018) – தனுஷ், ஒத்த செருப்பு (2019) – பார்த்திபன், சூரரைப் போற்று (2020) – சூர்யா, சார்பட்டா பரம்பரை (2021) – ஆர்யா, டாணாக்காரன் (2022) விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
News January 29, 2026
தேர்தலில் வெற்றிபெறுவது யார்?… புதிய கருத்துக் கணிப்பு

இந்தியா டுடேவின் MOOD OF THE NATION சர்வேப்படி, இப்போது லோக்சபா தேர்தல் நடந்தால் NDA கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தமாக 352 இடங்களில் NDA கூட்டணி வெற்றி பெறும் எனவும், இந்தியா கூட்டணி 182 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக 41%, காங்கிரஸ் 20%, மற்றவை 39% வாக்குகளை பெறலாம் எனவும் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.


