News April 2, 2025

CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

image

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <>cisfrectt.cisf.gov.in.<<>> என்ற இணையதளத்தில் நடைபெறுகிறது. இந்த வேலைக்கான கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18-23 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News November 7, 2025

ஓவியம் பாடும் காவியம் ருக்மிணி வசந்த்

image

காந்தாரா: சாப்டர் 1-ல் மெய்சிலிர்க்க வைத்த ருக்மிணி வசந்த், அதன்பிறகு தொடர்ச்சியாக சேலையில் இருக்கும் போட்டோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். படத்தில், இளவரசி கனகவதியாக வாழ்ந்த ருக்மிணி, சேலையில் பிரம்மன் தீட்டிய ஓவியமாக இருக்கிறார். தற்போது, இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோக்களில், அவரது கண்கள் காவியம் பேசுகின்றன. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News November 7, 2025

பழைய ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லுமா?.. முக்கிய அறிவிப்பு

image

பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK), அந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ளது. RBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (rbi.org.in) வெளியாகும் தகவல் மட்டுமே உண்மையானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதனால், உஷாராக இருங்கள் மக்களே!

News November 7, 2025

நடிகையிடம் அநாகரிக கேள்வி: நடிகர் சங்கம் கண்டனம்

image

நடிகை <<18218676>>கௌரி கிஷனுக்கு நடந்த சம்பவத்தை <<>>வன்மையாக கண்டிப்பதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள், பத்திரிக்கையாளர் போர்வையில் நடிகைகளை ஏளனமாக கேள்வி கேட்பது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க முன்னெடுப்புகள் தொடங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!