News April 2, 2025
வக்ஃபு மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியுமா?

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 240 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களையும் சேர்த்து பாஜகவுக்கு 295 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் டிடிபி, ஜேடியூவின் 28 எம்.பி.க்களும் அடங்குவர். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு 234 எம்.பி.க்களே உள்ளன. இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறுவது உறுதி.
Similar News
News October 21, 2025
உங்க மூஞ்சில Barber கோடு போட்டுட்டா?

கடையில் ஷேவ் பண்ணும் போது பார்பர் முகத்தில் கோடு போட்டுட்டா, நஷ்ட ஈடு வாங்கலாம் தெரியுமா? இதுக்கு பேரு ‘Deficiency of service’. அதாவது, தொழிலில் குறைபாடு. இப்படி கோடு விழுந்தால், Influencer-கள், யூடியூபர்கள் போன்றோர் பிஸினஸை இழக்கலாம். வழக்கு தொடர்ந்தால் வழக்கின் செலவு உள்பட நஷ்ட ஈடு கிடைக்கலாம். இதற்கு வீடியோ ஆதாரம் & இந்த பாதிப்பால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது போன்ற தகவல்களை சேகரிக்கவும்.
News October 21, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

இன்று இரவு 10 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், அரியலூர், கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இரவில் வெளியே செல்பவர்கள் கவனமா இருங்க. உங்க ஊரில் மழையா?
News October 21, 2025
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இங்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.