News April 2, 2025

லாலு ஹாஸ்பிடலில் அனுமதி

image

பிஹார் முன்னாள் CM லாலு பிரசாத் (76) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் உடனடியாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

Similar News

News March 21, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மார்ச் 21) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

BREAKING: அமமுகவுக்கு 12 சீட்கள் ஒதுக்கீடு

image

NDA கூட்டணியில் அமமுகவுக்கு 12 சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இன்று டெல்லி சென்ற TTV தினகரன், பியூஷ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அக்கட்சிக்கு 12 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவதாக TTV அறிவித்துள்ளார்.

News March 21, 2026

கிடைக்கும் தொகுதிகளில் போட்டி: திருமாவளவன்

image

இரட்டை இலக்கத்தில் சீட்களை கேட்ட திருமாவிடம், 7 சீட்களை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறியுள்ளதாம். இந்நிலையில், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் திமுக கூட்டணி மிகப்பெரியது என்பதால் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அத்துடன், கிடைக்கும் தொகுதிகளை மகிழ்வோடு ஏற்று விசிக & கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!