News April 2, 2025

உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2024-25இல் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் வரும் 6ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறகிறது. அனைத்து பட்ட, பட்டய தொழிற்முறை படிப்புகள் மற்றும் அவை வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

கிருஷ்ணகிரியில் கார் மோதி ஒருவர் பலி

image

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வீரப்பா, 38, டைலர். இவர் நேற்று முன்தினம் மதியம் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளார். மரக்கட்டா முனியப்பன் கோவில் அருகே, தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த சுசுகி சென் கார் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 4, 2025

கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!