News April 2, 2025

ஈரோடு: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

ஈரோடு, அந்தியூர் அருகே கொள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் தேர்வு சரியாக எழுதவில்லை என, மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 16, 2026

BREAKING: ஈரோடு மாவட்ட எஸ்பி மாற்றம்!

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அ. சுஜாதா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக டி.வி. கிரண் ஸ்ருதி புதிய எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News March 16, 2026

ஈரோடு: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News March 16, 2026

ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 04242210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!