News April 2, 2025

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் நர்ஸ் வேலை

image

தருமபுரி அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. ஒட்டுனர்களுக்கு 10 வகுப்பில் தேர்ச்சியும், மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்.இ நர்ஸ்ங் முடித்திருக்க வேண்டும். 19-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்

Similar News

News August 4, 2025

தருமபுரி மக்களுக்கு கொண்டாட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி செந்தில்நகர், இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, காலணி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை, காரிமங்கலம், சொன்னம்பட்டி, மாறண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, கொண்டம்பட்டி, பாலக்கோடு, பாளையம், சேசம்பட்டி, கெங்காலபுரம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் பகுதியில் மழையா?

News August 4, 2025

தர்மபுரி மக்களே! திருமணம் தடை நீங்க வேண்டுமா?

image

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் கோயில். சிறு குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுடன் இந்த கோயில் ஒப்பிடப்படுகிறது. திருமண வயதில் இருப்பவர்கள் நல்ல வரன் அமையவும், திருமணத் தடைகள் நீங்கவும் இங்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்குகின்றனர். சீக்கிரம் திருமணம் நடக்க நினைப்பவர்களுக்கு பகிருங்கள்!

News August 4, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶தர்மபுரியில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!