News April 2, 2025
4 நாட்கள் கனமழை எச்சரிக்கை

<<15967569>>இன்று<<>> கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை உள்ளிட்டவை. நாளை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி. 4ஆம் தேதி: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி. 5ஆம் தேதி: கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல்.
Similar News
News April 4, 2025
விஷவாயு தாக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தின் காந்த்வா அருகே 150 ஆண்டுகள் பழமையான கிணற்றை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிணற்றிலிருந்து சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், தலா ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
News April 4, 2025
₹23.75 கோடிக்கு Worth தான்…

ஏலத்தில் இவருக்கு போய், ₹23.75 கோடியா என விமர்சித்து, 3 மேட்ச்களில் கிண்டலடித்து வந்தவர்களுக்கு நேற்று வெங்கடேஷ் ஐயர் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டார். 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசி, சட்டென ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். போட்டி SRH கையில் இருந்து நழுவி போக முக்கிய காரணம் வெங்கடேஷ் ஐயர் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
News April 4, 2025
மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்?

ஏப்.6ம் தேதி PM மோடியை, EPS, OPS சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக அவரை சந்தித்தாலும், பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக சக்திகளையும் ஒன்றிணைப்பது, அதனால் ஏற்படும் சாதகம் & பாதகம், கட்சி அதிகாரம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெ., மறைவிற்கு பின், பிரிந்து கிடந்த OPS- EPS-ஐ மோடி தான் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.