News April 2, 2025
தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 4, 2025
தேனி : மருத்துவர் தாமதத்தால் சிசு உயிரிழப்பு

போடியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி சரண்யாவை பிரசவத்துக்காக நேற்று (ஏப்ரல்.3) அதிகாலை போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த செவிலியர்கள் பனிக்குடம் உடைந்திருப்பதாக கூறி, இரவு நேர பணி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் வந்து பார்த்தபோது சரண்யாவின் கர்ப்ப பையிலேயே ஆண் சிசு உயிரிழந்தது தெரியவந்தது.
News April 4, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 03.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 3, 2025
அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி – ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ம) பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.