News April 2, 2025
அக்னி குண்டத்தில் நிலை தடுமாறி விழுந்த பக்தர்

சிவகங்கை மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு அருகேஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழாநடைபெற்றது. 6 மாத பெண் குழந்தையுடன் தீ மிதிக்க வந்த பக்தர் அக்னி குண்டத்தில் நடந்து செல்லும்போது தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தார். தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் விழுந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 7, 2026
சிவகங்கை: அக்கா வீட்டில் 39 பவுன் நகை திருடிய தங்கை

கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கருப்பையா மனைவி சசிகலா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கிறார். அவரது நகைகளை சசிகலா தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த நகைகளில் 39 பவுன் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரித்தபோது சசிகலாவின் தங்கை மஞ்சுளா நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 20 பவுன் நகைகளை மீட்டனர்.
News March 6, 2026
சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

சிவகங்கை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT


