News April 2, 2025
சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs இபிஎஸ்.. வார்த்தை போர்

கச்சத்தீவு குறித்து முதல்வர் மற்றும் இபிஎஸ் இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் நீங்கள் 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இப்போது கூட டெல்லி சென்றீர்களே, கச்சத்தீவு குறித்து வலியுறுத்தினீர்களா? எனவும் வினவினார்.
Similar News
News April 4, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா அழைப்பிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இணைப்பு இரயில்வே பாலம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதன் அழைப்பிதழ் போக்குவரத்து அமைச்சகத்தால வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.உங்க ஊர் பெருமையா நீங்கதான் சொல்லணும். #SHARE ALL
News April 4, 2025
சைதை துரைசாமி மீது ஒழுங்கு நடவடிக்கையா?

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் சூழலில் சைதை துரைசாமியின் திடீர் அறிக்கை அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. அதிமுக மீண்டும் ஒன்றிணைவது தொடர்பாக அவரது கருத்து கட்சியில் சிலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடே ‘கெஸ்ட் ரோல்’ அரசியல்வாதி என ADMK IT விங் சாடியிருந்தது. இந்நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இபிஎஸ்ஸுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News April 4, 2025
மேட்சுக்காக ஹனிமூனை கேன்சல் செய்த வீரர்

SRH அணியில் நேற்று 2வது அதிகபட்ச ஸ்கோர் அடித்த கமிண்டு மெண்டிஸ் இந்த போட்டிக்காக தனது ஹனிமூனையே ரத்து செய்துள்ளார். ஆம், அவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்று முடிந்தது. இருப்பினும், கடமை அழைத்ததால் மேட்சுக்கு வந்துவிட்டார். ஸ்பின் ஆல்ரவுண்டரான மெண்டிஸ் 20 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 27 ரன்களை எடுத்தார். அதே போல, ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். ‘வாட் ஏ டெடிகேஷன்’