News April 2, 2025
கரூர்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

கரூரில் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
Similar News
News October 19, 2025
கரூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!
News October 19, 2025
கரூர் மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு!

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 88,000 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி கரூர் மாநகராட்சி 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில் நேற்று தொடங்கியது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி படத்துடன் அச்சிடப்பட்ட பையில் சுமார் 2 அடி உயரமுள்ள மூடியுடன் கூடிய சில்வர் அண்டா வழங்கப்பட்டது
News October 19, 2025
கரூர்: ரேஷன் கடைகள் தற்போது பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்

கரூரில் தற்போது வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.