News April 2, 2025

கிருஷ்ணகிரி 108-ல் பணிபுரிய நேர்முகத் தேர்வு

image

கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 10 வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற 24-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 8925941030, 8925940935 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். *10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News April 4, 2025

கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

கிருஷ்ணகிரி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தம்பதியரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation .nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்

News April 3, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 03.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

error: Content is protected !!