News April 2, 2025
இ-பாஸ் நடைமுறை: கலெக்டர் முக்கிய தகவல்!

“நீலகிரி கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி முறையில், செக் செய்யும் வகையில் இது அமைய உள்ளது. அடுத்த வாரம் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிகம் தேவைப்படமாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற சோதனைச்சாவடிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.” என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 4, 2025
சர்வதேச போட்டியில் வென்ற வீரர் கௌரவிப்பு

குன்னூர்: புதுடெல்லியில் சர்வதேச அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த, குன்னூரை சேர்ந்த மாற்றுதிறனாளியான சரவணன் என்பவருக்கு, குன்னூர் நகர திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்திரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட ‘பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா’ நடத்திய 22வது ஆண்டு, வலுதூக்கும் போட்டி போட்டியில் அவர் கலந்துகொண்டார்.
News April 4, 2025
முதல்வர் வருகை: நெடுஞ்சாலை பணிகள் தீவிரம்

தமிழக முதல்வர் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி உதகை தேசிய நெடுஞ்சாலையை, கோட்ட பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சாலையின் இரு புறமும் உள்ள புதர்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News April 4, 2025
நீலகிரியில் வேலை! APPLY NOW

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <