News April 2, 2025
கச்சத்தீவை பெற இன்று தனித் தீர்மானம்

கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
அன்புமணியை சாடிய ஜிகே மணி

பாமகவில் மோதல்போக்கு நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில், தைலாபுரத்தில் ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும், பாமகவின் நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ்தான் எனவும் குறிப்பிட்டார். ராமதாஸிற்கு தெரியாமல் பாமக அலுவலகத்தின் நிரந்தர முகவரியை தேனாம்பேட்டையில் இருந்து திலக் தெருவிற்கு மாற்றி இருப்பதாகவும் ஜிகே மணி குற்றஞ்சாட்டினார்.
News September 16, 2025
மாதவிடாய் தள்ளிப்போகிறதா? சிம்பிள் வைத்தியம்

பெண்களே, மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். இந்த எளிய விஷயங்களை தொடர்சியாக செய்து வந்தாலே இதனை சரி செய்யலாம். ➤மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் ➤பழுக்காத பப்பாளியை சமைத்து சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம் ➤கொத்தமல்லி இலை, விதைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் அருந்தலாம் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க!
News September 16, 2025
இவ்வளவு சொகுசு கார்களா..!

புருனே ஆட்சியாளர் சுல்தான் ஹசனல் போல்கியா, 7000 சொகுசு கார்களை தனது அரண்மனையில் வைத்துள்ளார். அவரிடம் 600 ரோஸ் ராயல்ஸ், 25 ஃபெராரிகள் உள்ளன. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய சொகுசு கார் கலெக்ஷனர் என்ற பெயரை பெற்றுள்ளார். இவரது கார் கலெக்ஷன் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இவரைப்போல, உங்களுக்கு தெரிந்த கார் கலெக்ஷனர் யாரேனும் இருந்தா? கமெண்ட் பண்ணுங்க.