News April 2, 2025
அரியலூரில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News December 22, 2025
அரியலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <
News December 22, 2025
அரியலூரில் 496 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது. மொத்தம் 1870 பேர் விண்ணப்பித்த நிலையில், 1374 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 496 பேர் எழுதவில்லை. தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் நடைபெற்ற தேர்வை காவல் துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பார்வையிட்டனர்.
News December 22, 2025
அரியலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தில் 2025-26-ம் கல்வியாண்டில் பயன்பெற அரசு கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் தங்களது கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


