News April 2, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ஏப்.02,08,10,20,22 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190), ஏப்.12,13,14,15,17,18,19,20,21 ஆகிய தேதிகளில் ஆழபுலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாறாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
Similar News
News April 7, 2025
சேலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள்

பாம்பன் பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் வழியாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயிலும், ஓஹா- ராமேஸ்வரம் ரயிலும் பழையபடி ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16618) நாளை (ஏப்ரல் 08) இயக்கத்தில் பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரம் செல்கிறது.
News April 7, 2025
கோடைக்கால இலவச கால்பந்து பயிற்சி!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இலவச கால்பந்து பயிற்சியை வழங்குகிறது GMFC சேலம். ஏப்.01 முதல் மே 31 வரை GMFC கால்பந்து மைதானத்தில் மாலை 04.00 முதல் மாலை 06.00 மணி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு அழைப்பு!
News April 7, 2025
சேலம் அங்கன்வாடியில் 417 வேலைவாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை<