News April 2, 2025
லாரி ஓட்டுநர்கள் மீது அரிவாள் வெட்டு

விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் நேற்று (ஏப்ரல் 1) ஒரே இரவில் 3 இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களை, மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றது. பைக்கில் வரும் அந்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 4, 2025
விழுப்புரத்தில் கார் கவிழ்ந்து விபத்து பெண் பலி

நெய்வேலி 26 வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந்தம், 55. நேற்று இரவு இவர் குடும்பத்துடன் காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பேரங்கியூர் நோக்கி சென்றபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News April 4, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (03.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 3, 2025
சாந்தமாக காட்சி தரும் பரிக்கல் நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில். நரசிம்மர் பொதுவாக ஆக்ரோஷமான தெய்வமாக அறியப்படுவதால் கோயில்களில் பெரும்பாலும் லக்ஷ்மியை மடியில் வைத்துள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுவர். ஆனால் இங்கு நரசிம்மர் சாந்தமாக காட்சி தருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான ஆலயமாக உள்ள இங்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க