News April 2, 2025

பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

image

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பைக்கில் சென்றவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், ஹரிதாஸ், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

Similar News

News August 16, 2025

ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News August 15, 2025

செங்கல்பட்டில் கழுகுகள் வணங்கும் அதிசய கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரிமலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு கழுகுகள் வணங்கிய பெருமை உண்டு. கிரேதா யுகத்தில் சண்டன் – பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி – சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் – மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி, வேதகிரீஸ்வரை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர். இங்கு வந்து சென்றால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

செங்கல்பட்டு: உள்ளூரிலேயே 25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்Assembly Line Machine Setter பணிக்கான 40 காலிப்பணியிடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!