News April 2, 2025
82 ஆண்டுகளுக்கு பின் தேர் வெள்ளோட்டம்

அரியலூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஒப்பில்லாத அம்மன் கோயிலுக்கான தேரோட்டம் கடந்த 82 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் தேரோட்டம் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று, வருகிற 7-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் மற்றும் தேரோடும் வீதிகளை ஆய்வு செய்தனர்.
Similar News
News August 23, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவி மையம் திறப்பு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம். மேலும், 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச எண் 15100 என்பதை அழைக்கலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்வாலண்டினா அறிவுறுத்தியுள்ளார். SHARE IT..
News August 23, 2025
ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.
News August 23, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், (ஆக.,22) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!