News April 2, 2025

அதிரடி நடவடிக்கை பாயும்: கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரியில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வள கடத்தல் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், விதிமீறிய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 இடங்களில் அனுமதியின்றி கருப்பு கிரானைட் எடுப்பது கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி இயங்கிய 2 கிரஷர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிரடி நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 14, 2025

கிருஷ்ணகிரியின் குட்டி இங்கிலாந்து எது தெரியுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து என்ற சிறப்பு பெயர் உண்டு. அடர்ந்த வனப்பகுதி மற்றும் குளிர்ந்த இதன் வானிலை இங்கிலாந்தை ஒத்திருப்பதால் ஆங்கிலேயர்கள் தளியை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்து வந்தனர். சிறப்பு பெயருக்கு ஏற்ப குளிர்ந்த சூழலோடு, அறியப்படாத சுற்றுலா தலமாக தளி உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

ஓசூர் பகுதியில் பயங்கர விபத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் அருகே இன்று (ஆகஸ்ட் 14) கோப சமுத்திரம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய கனரக லாரி ஆனது இரண்டு கார்களின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!