News April 2, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

image

நாமக்கலில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி ராசிபுரம்- 19, சேந்தமங்கலம்- 29, நாமக்கல்- 18, பரமத்தி வேலூா்- 26, திருச்செங்கோடு- 33, குமாரபாளையம்- 49 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் உமா‌ இன்று தெரிவித்துள்ளாா். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Similar News

News April 19, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 19, 2025

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 19, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.80 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

error: Content is protected !!